பத்தாம் வகுப்பு பொதுதேர்வை பொறுத்தவரை கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று நம்புகிறோம்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினாலும் கூட பெற்றோர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளை ஊக்கப்படுத்தி தேர்வு எழுத அனுப்ப வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை பரிசாக வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், பத்தாம் வகுப்பு பொதுதேர்வை பொறுத்தவரை கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று நம்புகிறோம் எனக்கூறினார்.
அனைத்து பள்ளிகளிலும் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே கலந்தாய்வு கூட்டம் நடத்தி மாணவர்கள் அனைவரும் தவறாமல் தேர்வு எழுத வேண்டும் என்றும் அதனை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் ஏப்ரல் மாதம் 10 மற்றும் 20 தேதிகளில் அனைத்து பள்ளிகளிலும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி அதில் தேர்வு எழுதாத மாணவர்களை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் துணை தேர்வுகளில் அவர்களை தேர்வு எழுதுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினாலும் கூட பெற்றோர்களாகிய நீங்கள் தான் குழந்தைகளை ஊக்கப்படுத்தி தேர்வு எழுத அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்தார்.அ
Discussion about this post