அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
நேற்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி, உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள இருதாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்றார்.
இந்த நிலையில், உடல்நல குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பூரண நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். மருத்துவ பரிசோதனையில் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு மாரடைப்பு தொடர்பான எந்த வித அறிகுறிகளும் இல்லை எனவும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அமைச்சர் உடல் நலன் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், மேல் வயிற்று வலி காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . வலி நிவாரணத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றபடி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நலமுடன் இருக்கிறார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.