மேல்மலையனுர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்..! குவிந்த ஏராளமான பக்தர்கள்..!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டியில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ஆடி அமாவாசை அன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும் பெரியாயி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தை தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு.., சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்கள் அருள் பாலித்த பின் அன்று இரவு 11 மணியளவில் அங்காள அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சிம்ம அலங்காரத்தில் தோன்றி ஊஞ்சல் உற்சவத்தில் சிறப்பாக அங்காள அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த மாதம் ஆடி மாதம் என்பதால்.., இந்த மாதம் முழுவதுமே அங்காள அம்மன் கோவிலுக்கு மிகவும் விசேஷமான மாதம் என்பதால். தினமும் ஒரு சிறப்பு பூஜைகள் அம்மனுக்கு செய்யப்படுகிறது, அதுமட்டுமின்றி ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். நாளொன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வரை வந்து சாமி தரிசனம் செய்து செல்வதாக.., மேல்மலையனுர் அங்காள அம்மன் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று ஒருநாள் மட்டும் இதுவரை பல்லாயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வதால்.., இந்த வாரம் முதல் ஆடி வெள்ளி என்பதால் பக்தர்களுக்காக கூடுதல் போலீஸ் காவலுக்கு போட பட்டுள்ளனர்.