ADVERTISEMENT
பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்டு பேசியதால் ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!!
ராஜஸ்தானில் உள்ள மக்கள் காங்கிரசை சகித்து கொள்ள தயாராக இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு 25- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தியோகார் நகரில் நடைப்பெற்ற பொது கூட்டட்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, பாஜக-வின் சக்தியை பற்றி அறியாமல் பலர் உள்ளதாக தெரிவித்தார்.
காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தானில் நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்து செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டதற்காக பாஜகவை கடுமையாக சாடினார்.
மக்களை தவறாக வழிநடத்தி, சதித்திட்டங்களைத் தீட்டி தேர்தலில் வெற்றி பெற பாஜக விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையேம் பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வரும் 25 ஆம் தேதிக்குள் விளக்கம் தர வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.