சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் பணிகள் ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்றிருந்தார். அப்பொழுது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் சென்னை மேயர் பிரியாவின் செயலை பாராட்டி பேசியுள்ளார்.
ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார் அதில், ஆதிகேசவப் பெருமாள் கோயில் திருப்பணிகள் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதாகவும் இனிமேல் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும் தெரிவித்த அவர், திருவண்ணாமலை தீபத்திற்கு 25 லட்சம் பக்தர்கள் வருகை தந்தார்கள். அதில் அனைவர்க்கும் அனைத்து வசதியும் செய்யப்பட்டு பாதுகாப்பாக நடத்தி முடித்து இருக்கிறோம். என்றும், அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் விஐபி பாஸ் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கோவில்கள் அனைவருக்கும் பொதுவானது என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சரிடம் மேயர் பிரியா காரின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த நிகழ்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தவற்கு அடுத்தடுத்த இடங்களுக்கு பயணம் செய்வதால் அந்த இடத்திற்கு விரைவாக செல்லவே மேயர் பயணித்தார். இந்த செயலை ஆணுக்கு நிகரான துணிச்சலாக பெண் பேரிடர் காலத்தில் பணியில் ஈடுபட்டது பாராட்டக்கூடிய ஒன்றாக பார்க்கவேண்டும் அதை அதிகார துஸ்பிரயோகமாக பார்க்க கூடாது என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.