உற்சாகத்தில் மேயர் பிரியா..!! சென்னை மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..?
சென்னை மேயர் பிரியாவுக்கு பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் பாய் பாய் சொல்லிவிட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 2023ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டின் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் போது, மேயர் உரையில் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் மாணவ மாணவிகளுக்கு வருடத்தில் ஒருமுறை கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் என அறிக்கை வெளியானது.
15 சுற்றுலா தளங்கள் :
அதன் படியே 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதாவது 5200 மானவர்களுக்கு பிர்லா, கோளரங்கம், பெரியார் அறிவியல் மற்றும் பழைய நூற்றாண்டு மண்டபம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்க நல்லூரில் உள்ள ஆவின் பால் தொழிற்சாலை சென்னை எண்ணூர் துறைமுகம் , தக்ஷிண சித்ரா அருங்காட்சியகம் என அனைத்து இடங்களையும் சுற்றி பார்க்க ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 5 மாதத்தில் 15 கட்டங்களாக அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
முதல் கட்டம் :
அதற்கு முதற் கட்டமாக இன்று 521 பள்ளி மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்து சென்றுள்ளனர். டி.எச்.சாலை மேல்நிலை நிலைப்பள்ளியை சேர்ந்த 270 மாணவர்கள் பட்டையில் நகர் மேல்நிலை பள்ளியில் இருந்து 100 மாணவர்கள், கல்யாணபுரம் மேல்நிலை பள்ளியில் இருந்து 50 மாணவர்கள் அப்பாசாமி மேல்நிலை பள்ளியில் இருந்து 100 மாணவர்கள், கல்யாணபுரம் மேல்நிலை பள்ளியில் இருந்து 50 மாணவர்கள் , அப்பாசாமி லேன் மேல்நிலை பள்ளியில் இருந்து 101 மாணவர்கள் என மொத்தம் 521 மாணவர்களுக்காக 10 பேருந்துகள் புறப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருமே இன்று பிர்லா கோளரங்கம், பெரியார் அறிவியல் தொழிற்நுட்ப மையம், அண்ணா நூற்றாண்டு நூலகம் என அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் சென்றுள்ளனர். முன்னதாக மாணவர்கள் அனைவரும் ரிப்பன் மாளிகைக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர். பின் அங்கு மேயர் பிரியாவும் அதிகாரிகளுடன் வந்துள்ளார். பள்ளி மாணவர்களை அழைத்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
உற்சாகத்துடன் பேருந்தில் ஏறிய மாணவர்களுக்கு நீங்கள் செல்லும் இடங்களுக்கு யாரும் தனியே சென்று விடாதிர்கள், என்றும் ஒற்றுமையாக இருங்கள், உங்கள் உடன் வரும் நண்பர்கள் யாரவது ஒருவர் சில நேரம் காணவில்லை என்றால் கூட ஆசிரியரிடம் கூறுங்கள் என அறிவுரை கூறி, கொடி அசைத்து கல்வி சுற்றுலாவை துவக்கி வைத்துள்ளார். மாணவர்களும் மேயர் பிரியாவிற்கு பாய் சொல்லி புறப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்கள் கேள்விக்கு பிரியாவின் பதில் :
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா பட்-ஜெட் தொடரில் அறிவித்த படி முதற்கட்டமாக இன்று கல்வி சுற்றுலாவிற்காக மாணவர்களை அனுப்பி வைத்துளோம். அடுத்ததாக 139 அரசு பள்ளிகள் சென்னை மாநகராட்சியில் இணைக்கப் பட்டுள்ளன.
சேதமாக இருக்கும் 46 அரசு பள்ளிகளை கண்டறிந்து சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் சீரமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாமன்னன் படம் மேயர் பிரியா கருத்து :
மாமன்னன் படம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, திமுக கடை பிடிக்கும் சமூகநீதி கொள்கை தான் படமாக படைக்கப் பட்டுள்ளது. திமுக ஆட்சியில், உள்ளாட்சி அமைப்புகளின் சரிபாதி இடங்களை பெண்கள் தான் ஆட்சி செய்கிறோம். எந்த விதமான ஏற்ற தாழ்வும் வந்தது கிடையாது. சொல்ல போனால் திமுகாவில் ஏற்ற தாழ்வு என்ற ஒன்று இல்லவே இல்லை என, செய்தியாளர்களிடன் மேயர் பிரியா பேசினார்.