“பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 17 இயக்கத்தினர் கருப்பு கொடி போராட்டம்”
“சுயமரியாதை மண்ணில் மோடி போன்றவர்கள் கால் வைக்க கூடாது எனவும் இது போன்ற ஒருவர் தமிழகத்திற்கு வர வேண்டாம் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை தி நகரில் உள்ள பெரியார் சிலை அருகே, மே பதினேழு இயக்கத்தினர் சில முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிரான கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டவர்கள் கைகளில் கருப்பு கொடிகளை எந்தி நீட் தேர்வு என்எல்சி நில அபகரிப்பு, காவிரி டெல்டா நிலங்கரி சுரங்கம், மீனவர் மீதானே இலங்கை தாக்குதல், இந்தி திணிப்பு, இஸ்லாமியர் தலித்துக்கள் மீதான தாக்குதல், விவசாயிகள் மீதான நெருக்கடி போன்ற தமிழின விரோத செயல்பாடுகளில் ஈடுபடும் “மோடியே திரும்பி போ” என பிரதமர் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

















