தகனம் செய்யப்பட்டது மாரிமுத்துவின் உடல்..!! மீண்டும் ஒருமுறையாவது கேட்குமா.., “ஏம்மா ஏய்”.
வாலி, பரையேறும் பெருமாள், பைரவா ஜெயிலர், மருது, கொம்பன் போன்ற படங்களில் குணச்சித்திர நடிகராகவும், புலிவால், கண்ணும் கண்ணும் போன்ற படத்தில் இயக்குனராகவும் பணிபுரிந்தவர் நடிகர் “மாரிமுத்து”.
40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், “எதீர்நீச்சல்” தொடர் மூலம் பிரபலமாகி “ஏம்மா ஏய்” என்ற வசனம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் “மாரிமுத்து” என்கிற “ஆதி குணசேகரன்” நேற்று காலை சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது உடல் நல சோர்வு ஏற்பட்டுள்ளது.
பின் ஸ்டுடியோவில் இருந்து வெளி வந்த அவர் தானாக காரை இயக்கி சென்று மருத்துமனையில் சேர்ந்துள்ளார். ஆனால் மருத்துவர்கள் மருத்துவம் பார்பதற்குள்ளே இயற்கை எய்தினார்.
அன்னாரின் உடல் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. எதிர்நீச்சல் தொடரில் நடித்த துணை நடிகர்கள், மற்றும் இயக்குனர்கள் என அனைவரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்து, அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாரிமுத்துவின் இரங்கல் செய்தியை கேட்டதும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன், மாரிமுத்து ஒரு அருமையான மனிதர் மூடநம்பிக்கைகளுக்கு எ திரான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.
நடிகர்கள் சரத்குமார், ரமேஷ் கண்ணா, இயக்குநர் வசந்த், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், சென்றாயன், ரோபோ சங்கர், சூரி, பிரசன்னா, பொன்வண்ணன், சரண்யா உள்ளிட்ட திரையுலகினர் மாரிமுத்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
திரை உலகைத் தாண்டி அரசியல் தலைவர்களான திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், சுபவீரபாண்டியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை சொந்த ஊரான தேனி மாவட்டம் பக்கத்தில் உள்ள பசுமலை தேரிக்கு கொண்டு வரப்பட்டது. அவரின் உடலை கட்டி பிடித்து ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழும் காட்சி இன்னும் சோகத்தை அளிக்கிறது.
மாற்று திறனாளி ரசிகர்கள்.., வந்து அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்க அவரின் குடும்பத்தினருக்கு ஆதரவு அளிக்கும் காட்சி காண்போரின் நெஞ்சை இன்னும் பதைபதைக்க வைக்கிறது.
மதியம் ஒரு மணிக்கு மேல் அவரது சொந்த ஊரில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு.., வேட்டு சத்தம் மற்றும் தாரை தப்பட்டை முழங்க “உடலை ஊர் வலமாக” கொண்டு சென்று இடுகாட்டில் தகனம் செய்தனர்.
என்னதான் மண் உலகை விட்டு பிரிந்தாலும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்க போகிறார்.., “ஏம்மா ஏய்” என்று சொல்ல அவர் இல்லை என்றாலும், அவரின் குரல் என்றும் ஒலித்து கொண்டு தான் இருக்கும்.
நீங்காத மாரிமுத்து என்கிற “ஆதிகுணசேகரன்” நினைவில் குடும்பத்தினர், உறவினர்கள், திரையுலகம்..
Discussion about this post