மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் தற்போது அவற்றில் தளர்வுகள் அறிவித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்கள் நாளை முதல் 3 நாட்களுக்கு 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வராதவர்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் செய்வதற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்களும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post