மதுரையில் மதிமுக மாநாடு நிர்வாகிகள் கூட்டம்..!!
மதுரையில் செப்டம்பர் 15ம்தேதி நடைபெற உள்ள மதிமுக மாநாடு வெற்றியடைய வேண்டிய களபணிகளை மேற்கொள்ளுவது குறித்து, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது,
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று, கோவை மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார், மதிமுக அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் வாயிலாக செப்டம்பர் 15ம்தேதி, அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில், மதிமுக சார்பாக நடைபெற உள்ள மாநாட்டை வெற்றியடைய செய்வது குறித்து விவாதிக்க பட்டது, இதில் கலந்து கொண்ட மாவட்ட, மண்டல பொறுப்பாளர்கள் இந்த மாநாடு வெற்றியடைய களபணியாற்றி வருகின்றனர். என்பதை கூட்டத்தில் தெரிவித்தனர்.
மேலும் கூட்டத்திற்கு தேவையான நிதியினையும், வழங்கினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட துரை வைகோ முன்னதாக காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் வைக்க பட்டுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் கூட்டத்தை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..