சவால் கொடுப்பதாக நினைத்து உலகின் மிக காரமான சிப்ஸ் சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் உலகிலையே மிகக் காரமான சிப்ஸ் என கருதப்படும் பாகுஸ் சிப்ஸை சாப்பிட்டு சேலஞ்ச் செய்வது வழக்கமாக இணையத்தளவாசிகள் வைத்துள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஹாரிஸ் வாலேபா என்ற 14 வயது சிறுவன் ‘பாகுய்’ சிப்ஸை சாப்பிட்டு வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் சில நிமிடங்களில் சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுத் துடித்துள்ளார். பிறகு ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குப் பரிசோதித்தபோது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் காரணமாக சமூக ஊடக சாவல்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. இந்த வகையான சவால்களில் பங்கேற்பது ஆபத்தானது என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.