உலகப்புகழ் பெற்ற மதுறை சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23ஆம் -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவுக்கு வழக்கம்போல் விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் மதுரை நகரமே விழாக்கோலத்தில் காணப்படுகிறது.
விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
மாலையில் மணமகள் கோலத்தில் மீனாட்சி அம்மன் , சுந்தரேசுவரர் பல் வேறு வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகள் வழியாக உலா வந்தனர்.
இந்நிலையில், சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகாலை 6 மணிக்கு மேல் சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. இதனால் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.
பல இலட்சம் மக்கள் வெள்ளத்தில் மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா தேரோட்டம் 😍 pic.twitter.com/K2KxQgNHGU
— Madurai ~weather ~ development⛈️🌧️☔🤝 (@mani9726) May 3, 2023