எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!!
காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில் தவறான தகவல்களை தேர்தல் கமிஷனுக்கு கொடுத்துள்ளதாக தேனியை சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த மத்திய குற்றப்பிரிவுக்கு நீதித்துறை நடுவர் உத்தரவிட்டிருந்தார். தற்போது இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது.
அதில் அவர் வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..