பாரத் பெயர் மாற்றத்திற்கு நச் பதில் கொடுத்த மதிமுக வைகோ
இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது அதிகார வரம்பை மீறிய செயல் என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் என்ப்படும் என்சிஇஆர்டி உருவாக்கிய உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ள நிலையில், இது குறித்து இக்குழுவின் தலைவரும், வரலாற்று ஆராய்ச்சி இந்திய கவுன்சில் உறுப்பினருமான ஐசக், “பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக உருவாக்கப்பட்ட என்.சி.இ.ஆர்.டி, சமூக அறிவியல் பாடத்துக்கான உயர் நிலைக் குழுவை அமைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய பாஜக அரசு “பாரத்” என்பதை மட்டுமே அதிகாரபூர்வ பெயராக மாற்ற முடிவு செய்தால், அவர்கள் அரசியலமைப்பின் 1-வது பிரிவைத் திருத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..