“காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவன் யாருமில்லை”
எல்லா படத்திலையும் ஹீரோ, வில்லன் என இரு கதாபாத்திரங்கள் இருக்கும் ஆனா இந்த படம் முழுவதிலுமே காமெடி மட்டும் தாங்க இருக்கும், ரவுடினு சொல்லிட்டு இருக்கும் ஹீரோ, உண்மையான ரவுடிகள் கதாபாத்திரத்தில் காமெடியன் என படம் முழுவதிலும் கொஞ்சம் கூட சலிக்காம இருக்க கூடிய பட ம் என்றால் “நானும் ரவுடி தான்” பொதுவாகவே விஜய்சேதுபதியின் நடிப்பிற்கும் பேசிச்சிற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்பது தான் உண்மை.
அவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் கொடுத்தாலும் இந்த படத்தின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர்.தன்னுடைய இயல்பான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர் “மக்கள் செல்வன்”இந்த படம் எவ்வளவு சிறப்போ அதில் வரும் பாடல்களும் அத்தனை சிறப்புடையதாக இருக்கும்.
நான் உனக்காக பேசும் காதல் வசனம் கேட்கலையா, ஏன் கண்ணுக்குள்ள உன்னை பொத்திவைப்பேன் உன்னையே, நா எவளோ பெரிய ரவுடியா ஆனாலும் உன்ன நல்லா பாத்து கொள்ளுவேன் என்னாலும் , எத்தனை சென்மம் எடுத்தாலும் நீ இல்லாம நான் இல்லடி ….. இந்த பாடலுக்கு இசை அமைத்து பாலையும் பாடியவர் “அனிருத் ரவிச்சந்தா்”
தங்கமே உன்னத்தான்
தேடிவந்தேன் நானே வைரமே
ஒருநாள் உன்னத் தூக்குவேனே…….
நம் இருவரும் சேர்ந்து போகும் பொழுது, வானம் நில நிறத்தில் இல்லாமல் வெண்மையாக மாறிவிடுகிறது, சந்தோஷமோ, கஷ்டமோ எதுவாக இருந்தாலும் நம் இருவருக்குள் முடிந்து கொள்ள வேண்டும் அன்பே, என்ன நிலையாக இருந்தாலும் எனக்கு நீ மட்டும் போதும் அன்பே என்ன ஒரு அற்புதமான வரிகள் இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் “அனிருத் ரவிச்சந்தா்”, பாடகர்கள் “நீட்டி மோகன்” மற்றும் “அனிருத் ரவிச்சந்தா்” பாடிய பாடல் இது.
நீயும் நானும் சோ்ந்தே
செல்லும் நேரமே நீலம் கூட
வானில் இல்லை எங்கும்
வெள்ளை மேகமே………
ஒருவன் எவ்வளவு பெரிய ரவுடியாக இருக்கட்டும் கொலைகாரனாக இருக்கட்டும் அவன் மீது ஒருவள் அன்பு காட்டினாள் போதும் அவளுக்கு என்று தன்னையே மாற்றி கொண்டு அவளுக்காக வாழ்வதற்கு ஆரம்பித்து விடுவான், இதை எல்லாம் செய்வதற்கு காதல் என்ற ஒரு ஆயுதம் இருக்கிறது, எப்பேர் பட்ட மனிதராக இருந்தாலும் சரி வாழ்வில் ஒரு முறையாவது இந்த மாயா வலையில் சிக்காமல் யாரும் போவதில்லை, இசையமைப்பாளர் “அனிருத் ரவிச்சந்தா்” பாடகா் “சித் ஸ்ரீராம்” பாடிய பாடல் இது .
அடக் காதல் என்பது
மாயவலை சிக்காமல்
போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை
தேவையில்லை……….
கடலின் அலை எப்படி உன் காலில் உரசி போகிறதோ அதை போல் நான் இல்லை கடலில் இருக்கும் மண் எப்படி கரையை கடக்கும் வரை இருக்கிறதோ அதை போல் உனக்கா நான் இருப்பேனடி நீ எதற்காகவும் கலங்கவே கூடாது, என்னுடைய உயிரோட ஆதாரமே நீ தானடி, யார் உன்ன விட்டுட்டு போனாலும் சரி ந உனக்காக இருப்பேன். இசையமைப்பாளா் “அனிருத் ரவிச்சந்தர்” இசையில் பாடகர் “சீன் ரோல்டன்” பாடிய பாடல் இது.
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி என் உயிரோட
ஆதாரம் நீ தானடி கண்ணான
கண்ணே நீ கலங்காதடி யாா்
போனா என்ன நான் இருப்பேனடி……..
இந்த திரைப்படத்தில் வரும் பாடல்களில் உங்களுக்கு மிகவும் மனம் கவர்ந்த பாடல் எது?
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..