நீங்கள் பார்க்க மறந்த பல முக்கிய செய்திகள்..!! படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..!!
ராணிப்பேட்டை மாவட்டம் :
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த பாலாறு அணைக்கட்டு பகுதியை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நீர்வளத் துறையின் கீழ் பராமரிப்பில் உள்ள பகுதிகளை துறை சார்ந்த அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அணைக்கட்டின் கட்டுமான வடிவமைப்பு மற்றும் உபரி நீர் வெளியேற்றுவதற்கான வழித்தடங்கள் குறித்து திட்ட வரைபடங்களை மூலம் துரை சார்ந்த அதிகாரிகளின் விளக்கங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம் :
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சிவாலயங்களில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு நாள்தோறும் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றது. இந்நிலையில் நவராத்திரி ஆறாம் நாளை முன்னிட்டு அம்பிகைக்கு ஸ்ரீ லட்சுமி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தர்மபுரி மாவட்டம் :
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மாங்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று மதிய உணவு இடைவெளியில் உணவருந்த சென்றனர். அப்போது பள்ளி வளாகத்திற்கு வெளியே இருந்த மரத்தில் இருந்த தேனீக்கள் திடீரென கலைந்து மாணவர்களை கடித்தது. இதில் காயம் அடைந்த மாணவர்களை ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அறிந்த பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி .கே மணி நேரில் வந்து மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட காயங்களை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
திருப்பூர் மாவட்டம் :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தீடீர் வெல்லபெருக்கு ஏற்பட்டது. இதனால் அடிவார பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலின் வழியே மழை அதிகரிக்கும் சூழல் நிலவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாலை 5 மணியளவில் பக்தர்கள் வெளியேற்றபட்டனர். இதனால் எந்த அசம்பாவிதங்களூம் ஏற்ப்படாமல் தவிர்க்கபட்டது.
திருப்பூர் மாவட்டம் :
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கடத்தூர் பகுதியில் அரிய வகை தேவாங்கு சுற்றி திரிந்தது. அந்த பகுதியில் விளையாட வந்த சிறுவர்கள் தேவாங்கை பத்திரமாய் மீட்டு ஊர் பெரியவர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினரிடம் தேவாங்கை பத்திரமாய் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் :
திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை அனல்மின் நிலையத்தில் கடந்த எட்டு தினங்களுக்கு முன்பு வேலைக்காக சென்ற சோழவரம், ஜெகந்நாதபுரத்தை சார்ந்த நாகராஜ் என்பவர் சாம்பல் கழிவு கால்வாயில் விழுந்து மாயமாகி உள்ளார். கடந்த எட்டு நாட்களாகியும் அவரை காவல்துறையினர் கண்டுபிடித்து தராததால் அவரின் உறவினர்கள் வடசென்னை அனல்மின் நிலைய இரண்டாம் அலகின் நுழைவாயில் அருகே முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.