லாக்கப் மரணம் – 3 காவல்துறை அதிகாரிகளுக்கு 7 ஆண்டு சிறை..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி காவல் நிலையத்தில், கடந்த 01.10. 2013-ம் ஆண்டு கோபி (எ) கோபால் கள்ளச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணையின் போது காவல் நிலையத்திற்கு உள்ளேயே ( உயிரிழந்த வழக்கில், காவல் ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு.
வழக்கை சிபிசிஐடி காவல்த் துறையினர் விசாரித்து வந்த நிலையில்ஆய்வாளர் முரளிதரன், சிறப்பு உதவி ஆய்வாளர் உமா சங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் இன்பரசன் ஆகிய மூவருக்கு தண்டனை விதித்து வேலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறபித்து இருக்கிறார்.
இன்ஸ்பெக்டர் முரளிதரனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சத்து 70-ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறப்பு உதவி ஆய்வாளர் உமாசங்கருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டரையும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும், பணி ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் இன்பரசன் 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது ஆய்வாளர் முரளிதரன் வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஆய்வாளர் முரளிதரன் மற்றும் இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-பவானி கார்த்திக்