“சின்ன சின்ன ஆசை..” சிறகடிக்கும் ஆசை..! நீங்க தயாரா மக்களே…?
வருகின்ற 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச பலூன் திருவிழாவை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது..
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை மற்றும் உழவர் தினத்தை கொண்டாடுவது வழக்கம்., முக்கியமாக உழவர் தினம் (மாட்டு பொங்கல்) அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்., அதுமட்டுமல்ல கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் கார் ஷோ, மற்றும் புத்தகம் கண்காட்சி நடத்தி வருகிறது..
கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி கூட இந்திய விமானப்படையின் 92 ம் ஆண்டு விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் வருகின்ற ஜனவரி 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ளது..
அதன் தேதியை தமிழக அரசு அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது., கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது..