“நடப்போம் நலம் பெறுவோம்” வரப்போகும் புது திட்டம்..?
நவம்பர் 4ம் தேதி ஹெல்த் வாக் எனப்படும் “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஹெல்த் வாக் சாலையை ஆய்வு செய்த பின்னர் மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நவ.4ம் தேதி 38 மாவட்டங்களில் 8 கிலோ மீட்டர் கொண்ட “ஹெல்த் வாக் சாலை” தொடங்கப்படவுள்ளதாகவும், இந்த திட்டத்தை சென்னை பெசன்ட் நகரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா காலத்திற்குப் பிறகு சமீபகாலமாக இளம் வயதினர் உட்பட பலருக்கும் மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியம் என கூறினார்.
மேலும், மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையின் சார்பில் ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.