“ஊடக தர்மத்தை உறுதி செய்வோம்” மதிமுகம் தொலைகாட்சியின் அன்பான வேண்டுகோள்..!!
கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.., பிரபலங்கள் இறந்து விட்டார்கள் என்றும்.., ஏதாவது பிரபலங்கள் இறந்து விட்டால் அவர்களின் இறப்பிற்கு இதுதான் காரணம் என்றும் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.., அவர்களுக்கு பிரபல சேனல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல நடிகரும் இயக்குனருமான “மாரிமுத்து” மாரடைப்பு காரணமாக காலமானார்.., அவரின் இறப்பிற்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.., அவரின் இறப்பிற்கு “மாரடைப்பு” தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தாலும்.
அவரின் இறப்பிற்கு ஜோசியம் தான் காரணம்.., சீரியலில் அவர் மாரடைப்பு வருவதை போல நடிப்பது தான் காரணம் என பல யுடியூப் சேனல்கள் பல தகவலை பதிவிட்டனர்..,
இவருக்கு மட்டுமா நேற்றைய முன்தினம் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட இசையமைப்பாளரும் நடிகருமான “விஜய் ஆண்டனியின்” மகள் மீரா இறந்த பின்..
மகளை ஒழுங்காக வளர்க்க தெரியவில்லை.., மகளிடம் மனம் விட்டு பேசவில்லை, பேசியிருந்தால் இப்படி நடந்திருக்காது என பலரும் கன்டென்ட் க்ரியேட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்..
ஒருவர் இறந்தது முதல் அவரின் இறுதி சடங்கு நடக்கும் வரை.., அதை வீடியோவாக பதிவு செய்து ஊடங்களில் பணம் சம்பாதிப்பதற்காக இந்த செயல்கள் செய்கின்றனர்..
அதை மீண்டும் மீண்டும் திருப்பி திருப்பி தொலைகாட்சியில் ஒளிபரப்ப செய்து.., இறந்தவரின் குடும்பத்திற்கு மேலும் வேதனையை கொடுகின்றனர்..
இது போன்ற செயல்கள் இனி நடக்க வேண்டாம் என ஊடகம் சார்பில் கேட்டு கொண்டுள்ளனர்..
எனவே ஊடக தர்மத்தை உறுதி செய்வோம்” என மதிமுகம் தொலைகாட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..