வரும் கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் சேர்க்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அரசியலைக் கடந்து தமிழ் புலமையில் சிறந்து விளங்கியவர். அதனை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் பாடப்புத்தக்கத்தில் இடம் பெறச் செய்ய உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை
“செம்மொழியான தமிழ்மொழி” என்ற தலைப்பில் 9ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் கலைஞர் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்த பாடம் இடம் பெற உள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் இந்த பாடப்புத்தகங்கள் மாணவர்களின் கைக்கு கிடைக்கும் வகையில் அச்சிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.