சட்ட திருத்த மசோதா அவையில் நிறைவேற்றம்…!! 17 சட்டப்பிரிவுகளில் தண்டனை…?
தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சட்டசபை 5வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார். தொடர்ந்து இந்த மசோதா தொடர்பாக பேசிய அவர், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டால் ஆயுள் தண்டனையும் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் மரண தண்டனை விதிக்க படும் என்று தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் வகையில் பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் பாரதீய நகரிக் சுரஷா ஆகிய மத்திய சட்டங்களில் உள்ள 17 சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கும் வகையில், திருத்தங்களை மேற்கொள்ள இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டது. அதாவது தமிழகத்தில், பெண்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கூட்டு பாலியல் வழக்கில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..