அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர கடைசி தேதி..?
பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விண்ணப்படிவம் மே 19ம் தேதி வரை வழங்கப்படும் எனவும், WWW.tngasa.in என்ற இணையதளத்திலும் மாணவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அரசு உயர்கல்விதுறை தெரிவித்துள்ளது.
மாணவர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் அனைத்தயும் அவர்கள் பெறப்பட்ட மதிப்பெண் விகிதத்தில் ஆலோசனைக்கான ( Counselling ) நாள் என்று தேதியையும் கடிதத்தின் மூலம் மே 23ம் தேதிக்குள் அனுப்படும் எனவும் உயர்கல்விதுறை தெரிவித்துள்ளது.