அரியலூரில் தொடரும் நிலம் ஆக்கிரமைப்பு ..!
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே பொது இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமைப்பு செய்திருப்பதை கண்டித்து ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மக்களால் பரபரப்பு.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் கிராமத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 23 ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை மற்றும் பொது பயன்பாட்டிற்காக ஒரு ஏக்கர் 63 சென்ட் இடம் ஆதி திராவிட நலத்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் 23 பேரில் ஒருவராக உள்ளவர் தனக்காக உள்ள இடத்துடன் பொது இடத்தை 41 சென்ட் ஆக்கிரமித்துக் கொண்டு பயன்படுத்தி வந்துள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை,
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி காலனி மக்கள் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து, பொது இடத்தை மீட்டு கொடுக்காததை கண்டித்து தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டை ஒப்படைக்க கோரி ஆதி திராவிடர் நலத்துறையினர் தாசில்தார் அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.
அப்போது அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய தாசில்தார் மற்றொரு தரப்பையும் வரவழைத்து இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..