குஸ்தி மான்யா நாயுடுவா இவங்க…!! அட இப்பவும் இப்படி இருக்காங்களே..!!
குஸ்தி பட நடிகை மான்யா நாயுடுவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மான்யா நாயுடு. தெலுங்கு சினிமா மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் ‘நைனா’ என்ற ஹாரர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பிரபு, கார்த்திக், வடிவேலு, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘குஸ்தி’ படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார்.
மான்யா நாயுடு தமிழ் படங்களில் நடித்தவரா..?
இளைஞர்களை ஈர்த்த மான்யாவுக்கு தமிழில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் பிற மொழி படங்களில் செம ஆக்ட்டிவாக நடித்து வந்தார். குறிப்பாக தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் அதிக படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வலம் வந்தவர் தான் மான்யா நாயுடு
இதையடுத்து மான்யா நாயுடு நடிக்க வில்லையா? என்ன காரணம் என்று பார்க்கலாம் வாங்க பல மொழி படங்களில் நடித்து பிஸி நடிகையாக வலம் வந்த இவர், 2010ம் ஆண்டுக்கு பின் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு திருமண வாழ்க்கைகளுள் ஐக்கியமானார்.
திருமண வாழ்க்கையை என்ஜாய் செய்து வரும் மான்யாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மான்யாவின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
குஸ்தி பட நடிகையா இவங்க..? அந்த அளவுக்கு மாறிவிட்டார் என்று ஆச்சரியத்துடன் ரசிகர்கள் மான்யாவின் புகைப்படத்துக்கு லைக் செய்தும் மான்யா நாயுடுவின் படத்தையும் மிஸ் செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கவிப்பிரியா

















