கஷ்டங்களை தாண்டி கர்ணாக மாறிய KPY பாலா..!
பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் பாலா. இவர் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் குடும்ப வறுமையால் சிறு வயதில் இருந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.. பின்னர் அதே தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர், அதில் சம்பாதிக்கும் பணத்தை இல்லாதவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதானல் மக்கள் அவரை கர்ணனாகவும் அன்னைதெரசாவாகவும் பார்க்க ஆரம்பித்தனர். தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்யும் பாலாவை அவரது ரசிகர்கள் வள்ளல் பாலா என்று அழைத்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த அஜித் என்ற கல்லூரி மாணவனுக்கு பைக் வாங்கி கொடுத்து உதவினார்..
அதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த ஜீடோ விளையாட்டு வீரங்கனையான செல்லமணி நேபளாத்தில் நடக்கும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள போதிய பணம் இல்லாமல் தவித்திருந்தார். இதனை அறிந்த பாலா ராகவா லரான்ஸிடம் கூறி ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உடன் இணைந்து உதவி செய்தார்.
அதற்கு முன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிதியுதவி மற்றும், இலவச உணவு பொருட்கள் வழங்கினார்.. இது மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன் கூட காமெடி நடிகர் வெங்கல்யாவிற்கு 1 லட்சம் ரூபாய் உதவியாக வழங்கினார்..
இவர் நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல சினிமாவிற்கு பின் கஷ்டப்படும் அனைத்து குடும்பங்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார்..
சுயநலமாக வாழும் சிலருக்கு மத்தியில் உதவி என்று கேட்டால் உடனே வந்து உதவி செய்யும்… “KPY பாலாவிற்கு” மதிமுகம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
– லோகேஸ்வரி.வெ