கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு..!! நீதிபதி அதிரடி உத்தரவு..!!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் “ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்” கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தலை., கை கால்களில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த “சஞ்சய் ராய்” என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கை, முன்பு காவல்துறையினர் நடத்தி வந்த நிலயில் சி.பி.ஐ விசாரணை மாற்றபட்டது. இந்த வழக்கின் விசாரணையில், அந்த பெண் மருத்துவர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனைதொடர்ந்து பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது.
அதில் காவல்துறையினரிடம் மருத்துவரின் புகைபடங்கள் இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது குறித்தும் முதல் தகவல் தாமதமாக பதிவு செய்தது மற்றும் மருத்துவமனை வளாகம் மர்ம கும்பலால் உடைந்து சூறையாடப்பட்டது குறித்து சரமாரியான கேளிவிகளை நிதிபதிகள் முன் வைத்துள்ளனர்.
மேலும் சம்பவம் நிகழ்ந்த மருத்துவமனை மற்றும் விடுதிக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படை (CISF) பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
-பவானி கார்த்திக்