’கே.ஜி.எப்-2′ படத்தில் முதல் பாடலான “தூஃபான்…” பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் வெளியான படம் ‘கே.ஜி.எஃப். சேப்டர் 1’. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2′ என்ற பெயரில் தயாராகி வருகிறது.
இதில், யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்ளில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘கே.ஜி.எஃப். சேப்டர் 2’ படத்தின் முதல் பாடலான “தூஃபான்…” என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இத்துடன், படக்குழு ‘கே.ஜி.எஃப். சேப்டர் 2’ படத்தின் ட்ரைலர் வரும் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.