மாற்றுதிறனாளியிடம் கைகுலுக்கிய விஜய்..!! சந்தோஷத்தில் மாற்றுதிறனாளி..!!
இரு தினங்களுக்கு முன்பு சூட்டிங்கிற்காக கேரளா திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் சென்ற விஜய்யை ஏராளமான கேரள ரசிகர்கள் காத்திருந்து உற்சாகமான வரவேற்பை கொடுத்தனர்.
சூட்டிங் ஸ்பாட் மற்றும் விஜய் தங்கி உள்ள விடுதி போன்ற இடங்களில் அவரை காத்திருந்து கேரள ரசிகர்கள் சந்தித்து வருகின்றனர்.
சின்ன குழந்தை ஒன்றை கையில் தூக்கி குழந்தை விஜய்க்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் இன்றைய தினம் விஜய் தங்கிருந்த விடுதியில் காத்திருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரை விஜய் சந்தித்து மகிழ்ந்தார்.
மாற்றுத்திறனாளி தன்னுடைய பெற்றோருடன் விஜயை பார்க்க காத்திருந்த நிலையில் அவருடன் கைகுலுக்கி விஜய் தன்னுடைய உற்சாகத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.