கவரைப்பேட்டை இரயில் விபத்து..! 13 பேருக்கு சம்மன்…!! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு…!!
கவரைப்பேட்டை இரயில் விபத்துகுறித்து சென்னை கோட்ட மேலாளர் இரயில்வே ஊழியர்கள் 13 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளார்…
நேற்று இரவு மைசூரில் இருந்து ஆந்திரா வழியே தர்பங்கா செல்லும் “பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ்” சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் ரயில் எண் (12578), மீது மோதி விபத்துக்குள்ளானது.
பெரம்பூரில் இருந்து நேற்று இரவு 7.30 மணிக்கு புறப்பட்ட இந்த பாக்மதி அதிவிரைவு எஸ்பிரஸ் நேற்று இரவு 8.27 மணியளவில் கவரைப்பேட்டையை வந்தடைய வேண்டிய நிலையில் கால தாமதமாக நேற்று இரவு 9.24 மணிக்கு வந்து சேர்ந்துள்ளது.
அப்போது தண்டவாளத்தில் சிகனலுக்காக நின்று கொண்டிருந்த சரக்கு இரயிலின் மீது பின்புறத்தில் அதிவேகமாக வந்து மோதியதில் இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது.. அதில் விபத்தில் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தகவல்கள் வெளியானது..
மேலும் சரக்கு இரயில் தடம் புரண்டதில் சில பெட்டிகளில் தீ பற்றியுள்ளது.. அதே சமயம் பயணிகள் ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. மற்றும் மூன்று பெட்டிகள் பக்கவாட்டில் சாய்ந்த நிலையில், 2 பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி உருக்குலைந்துள்ளது. இதுவரை இந்த விபத்தில், 19 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்..
பாதிக்கப்பட்டவர்கள் கவரைபேட்டை அரசு மருத்துவமனை., சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை., மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்..
ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது… தற்போது இந்த விபத்தில் தடம் புரண்டுள்ள இரயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில், விபத்து தொடர்பாக 13 ரயில்வே ஊழியர்களுக்கு சென்னை கோட்ட மேலாளர் சம்மன் அனுப்பியுள்ளார். கவரைப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மோட்டர் மேன், கவரைப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி என மொத்தம் 13 பேருக்கு சம்மன் அனுப்பட்டதை தொடர்ந்து., அவர்கள் 13 பேரும் இன்று மாலை தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் விசாரணை வர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..