கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த சோற்றுக்கற்றாழை வியாபாரி பிரபு (வயது 40). இவரது மனைவி மதுமிதா (வயது 35).
இந்த தம்பதிக்கு 10 வயதில் தியா 3 வயதில் ரிதன் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். கடந்த 18ம் தேதி முன்பு மதுமிதாவின் தந்தை முத்துக்கிருஷ்ணன் என ஐந்து பேரும் குடும்பத்துடன் கடந்த 18-ம் தேதி உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ளனர்.
பின்னர், பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துள்ளளனர். கடந்த 28-ம் தேதி கொல்கத்தாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு, மச்சுவா பஜாரில் அமைந்துள்ள ருத்ராஜ் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பிரபு, அவரது மனைவி மதுமிதா ஆகிய இருவரும் ஹோட்டலில் இருந்து வெளியே சென்றுள்ளனர்.தாத்தா முத்துகிருஷ்ணன் பேரக்குழந்தைகளுடன் ஹோட்டலில் இருந்துள்ளார். அப்போதுதான் , ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்து போனார்கள். அவர்களின் கரூரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகியோரும் அடக்ககம்.
தகவல் அறிந்து பதைபதைப்புடன் ஹோட்டலுக்கு திரும்பிய பிரபு, மதுமிதா ஆகியோர் குழந்தைகள் மற்றும் தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
உயிரிழந்தவர்களின் உடலை கரூர் மாவட்ட ஆட்சியர் உதவியுடன் விரைவாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து உப்பிடாமங்கலம் கிராம மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.