கர்நாடகத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்து கோடியே 31 லட்சத்து 33,000 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
84,000 கர்நாடக போலீசார் மற்றும் 650 பட்டாலியன் துணை நிலை ராணுவத்தினர் உட்பட ஒரு லட்சத்து 56 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மூன்று லட்சத்து 6 ஆயிரம் ஊழியர்கள் வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 12,400 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.