கங்கனா ரணாவத்தை அறைந்த பெண் காவலர்..! பின்னணியில் வெளிவந்த பல அதிர்ச்சி..!!
சண்டிகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக சொல்லப்படுகிறது..
ஆவேசத்திற்கு காரணம் :
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி போராட்டம் நடத்தியுள்ளனர்.
அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாப் பெண்கள் வெறும் பணத்திற்காக மட்டுமே கலந்து கொண்டனர் என தரம் தாழ்ந்து பேசியுள்ளார்.
அந்த காரணத்தால் கங்கனா ரணாவத்தை பெண் காவலர், அடித்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கங்கனா ரணாவத்தை தாக்கியது ஏன் என்பது குறித்து ஆவேசமாக பெண் காவலர் குல்வீந்தர் கவுர் பேசியுள்ளார்.
அது தொடர்பாக கவுர் கூறியதாவது :
“விவசயிகள் 100 ரூபாய் வாங்கி கொண்டு அங்கே போராடிக்கொண்டு இருப்பதாக கங்கனா ரணாவத் பேசினார்.
கங்கனா ரணாவத் இவ்வாறு அறிக்கை வெளியிடும் போது எனது தாயார் அங்கே போராடிக்கொண்டு இருந்தார். விவசாயிகளை கங்கனா ரணவாத் அவமதித்துவிட்டார்” என்றார்.
முன்னதாக, சண்டிகர் விமான நிலையத்தில் தன்னை பெண் காவலர் தாக்கியது குறித்து கங்கனா வெளியிட்ட வீடியோவில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கங்கனா ரணாவத் வீடியோ :
கங்கனா ரணாவத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது. என்னை சண்டீகர் விமான நிலையத்தில் பெண் அதிகாரி தாக்கியதை அறிந்த என்னுடைய நலம் விரும்பிகள், மீடியாக்களிடம் இருந்து நான் எப்படி இருக்கிறேன்..? என கேட்டு எனக்கு செல்போன் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
சண்டீகர் விமானத்தில் இன்று மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் என்னை சோதனை செய்தனர். அப்போது அதை முடித்துக் கொண்டு நான் அங்கிருந்து நகர்ந்தேன்.
அப்போது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் என்னை அறைந்தார். என்னை அவதூறாக பேசினார்.
என்னை ஏன் அடித்தீர்கள் என நான் கேட்டதற்கு..? அவர் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் செயல்படவில்லை என்பதால் அறைந்ததாக தெரிவித்திருந்தார்.
எப்படியோ நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன். ஆனால் எனது கவலை என்னவென்றால் பஞ்சாபில் அண்மைகாலமாக அதிகரித்து வரும் தீவிரவாதத்தையும் வன்முறையையும் எப்படி கையாள்வது என்பது தான். என கங்கனா அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
சிஐஎஸ்எஃப் அதிகாரி கூறியது :
சண்டீகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்ற போதுதான் குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கங்கனா ரனாவத்தை தாக்கினார். டெல்லியில் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நடத்திய போராட்டத்தில் பஞ்சாப் பெண்களும் பணத்திற்காகவே கலந்து கொண்டனர். என தரம் தாழ்ந்து பேசியதற்காக அந்த காவலர், கங்கனாவை அடித்ததாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில், தான் பெண் காவலரே கங்கனாவை அடித்தது ஏன் என்று கூறியுள்ளார்.
பெண் காவலர் சஸ்பெண்ட் :
கங்கனா ரணாவத்தை தாக்கியது தொடர்பாக பெண் காவலர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..