கள்ளழகர் கோவில் வைகாசி வசந்த உற்சவம்..!
மதுரையில் உள்ள அழகர் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறும். இந்த ஆண்டும் வசந்த உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி கோவில் வழியாக கள்ளழக பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் பல்லக்கில் வீதி ஊர்வலம் வந்தார்.
சுவாமி வீதி உலா வரும் பொழுது பல்வேறு பக்தர்கள் தீப ஆராதனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் இன்னும் பத்து நாட்களுக்கு திருவிழா நடைபெறும் என்றும் கோவில் துணை ஆணையர் ராமசாமி தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post