ப்ளு சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த கலையரசன்…!!
சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில்., தீபாவளி அன்று வெளியான படம் தான் “அமரன்..” தமிழ்நாட்டில் வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜரின் வாழ்க்கையை எடுத்து சொல்லும் விதமாக “ட்ரூ ஸ்டோரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி” என்ற புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ₹45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது..
மேலும் இப்படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் படத்தை பார்த்து விட்டு நல்ல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..
இந்நிலையில் படங்களுக்கு விமர்சனம் செய்யும் யூடியுபர் ப்ளூ சட்டை மாறன் அமரன் படம் குறித்து தவறுதலான விமர்சனங்களை பதிவிட்டுள்ளார்..
இதனை பார்த்த நடிகர் கலையரசன் தக்க பதில் அளித்துள்ளார்.. அதாவது ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதும்..
அதில் தவறான கருத்து ஏதும் இருந்தால் அதை கண்டிப்பதும் அவரவர் உரிமை! முழு வெறுப்போடு ஒருவரை விமர்சனம் எனும் பெயரில் இப்படி அருவுறுப்பாக தனிமனித தாக்குதல் செய்வதென்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது..! என தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..