நடிகர் கருணாகரன் வீட்டில் நகை திருட்டு…!! விசாரணையில் வெளிவந்த பலதிடுக்கிடும் தகவல்கள்..!!
காமெடி நடிகர் கருணாகரன் வீட்டில் 60 சவரன் தங்க நகைகளை திருடி சென்ற அவரது வீட்டில் பணி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
இன்று நேற்று நாளை., ஹலோ நான் பேய் பேசுறன், அயலான் போன்ற பல படங்களில் காமெடியனாக நடித்த நடிகர் கருணாகரன் சென்னை காரப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
நேற்று அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.. அதன் பின்னர் அவரது மனைவி கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்.. இதுகுறித்து விசாரணை செய்தனர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.., அவரது வீட்டில் வேலைபார்க்கும் வேலையாட்களிடம் விசாரணை செய்ததில் வீட்டில் சமையல் வேலை செய்து வந்த விஜயா (வயது 44) என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.. அதன் பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில்
நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அதனையடுத்து விஜயாவை கைது செய்து அவரிடம் இருந்து 60 சவரன் நகைகளை பறிமுதல் செய்து கருணாகரனிடம் ஒப்படைத்தனர்..