ஜப்பானின் புகுஷிமா பகுதி அருகே 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் இன்று(மார்ச்.17) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.
இது குறித்து ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே இன்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி இரவு 11.36 மணி) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 60 கிலோமீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாக அங்கு 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 40.5 மீட்டர் உயரம் வரை அங்கு அலைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

















