தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 38% ஆக உள்ள அகவிலைப்படி 01.04.2023 தேதியிட்டு 42%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் என்றும், 4% அகவிலைப்படி உயர்வால், ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.