தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கு அடித்த ஜாக்பாட்..!! இவ்ளோ பணம் வாங்கிக்கலாமா..?
முத்துலட்சுமி ரெட்டியின் மகப்பேறு நிதியுதவி திட்டம் :
தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் பல ஆண்டு காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து பெயரை பதிவு செய்து, “பிக்மி“‘ என்ற எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த எண்ணை பதிவு செய்த பின் கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் வரை வரவு வைக்கப்பட்டு 4-வது மாதத்திற்கு பின் மாத தவணையாக 2,000 ரூபாய் வரை வழங்கப்படும்.
மேலும், 2,000 ரூபாய் மதிப்புள்ள பெட்டகங்கள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை இரண்டு முறையாக மகப்பேறு பெண்கள் பெற்றுக்கொள்ளலாம்.
அதன் பின் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்த பிறகு, 3-வது தவணையாக 4,000 ரூபாயும், மகபேறு காலத்தில் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தும் போது 4-வது தவணையாக 4,000 ரூபாயும், குழந்தைக்கு 9-வது மாதம் முடிந்த பின் ஐந்தாவது தவணையாக 2,000 ரூபாய் என மொத்தம் 14,000 ரூபாய் வரை தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 4,000 ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படும். மொத்தம் 14000 ரூபாய் பணம் + 4000 ஊட்டச்சத்து பொருள் பெட்டகம் என தமிழக அரசு வழங்கி வருகிறது.
நிதிஉதவி திட்டத்தில் குற்றச்சாட்டு :
ஆனால் இந்த திட்டம் பலருக்கும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் ஒரு சில பெண்களுக்கு 4000 ரூபாய் முதல் 8000 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்துள்ளது.
குறிப்பாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கான காரணம் குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது, மருத்துவமனையில் பதிவு செய்த பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் பொருந்தவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களை கூறி அதிகாரிகள் கூறுவதாக கர்ப்பிணி பெண்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் பிரதம மந்திரியின் மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின்கீழ் இணையதளப் பதிவேற்றத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டதால் மகப்பேறு பெண்களுக்கு தக்க சமையத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் இந்த மகப்பேறு நிதியுதவி திட்டம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் குறித்து விளக்கம் அளித்த அரசு இணையதள சர்வர் பிரச்சனையால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த திட்டத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. அதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.11,702 கோடி நிதி 1.14கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் பிரதம மந்திரியின் மாத்ருவந்தனா யோஜனா திட்டத்தின்நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் தற்போது சில மாற்றங்களை அரசு செய்திருப்பதாகவும் ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய மாற்றங்களுடன் திட்டம் செயல்படுத்தப்பட போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..
அதாவது தற்போது வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த 14,000 ரூபாய் நிதியுதவி இனி மூன்றுதவணைகளில் வழங்கப்படும்.
கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் 6000 ரூபாயும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் 6000 ரூபாயும், குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் 2000 ரூபாயும் வழங்கப்படும் எனவும் மேலும் மகபேறு காலத்தில் மூன்றாவது மாதத்தில் முதல் ஊட்டச்சத்து பெட்டகமும் ஆறாவது மாதத்தில் இரண்டாவது ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..