காரில் சென்ற நண்பர்கள் விபத்தில் சிக்கிய பரிதாபம்..!
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஷால், நரேன், பிரணவ், பூபேஷ், இப்ராகிம் ஆகியோர் பள்ளிக்காலம் முதலே நண்பர்களாக இருந்து வருகின்றனர். இவர்களில் விஷால் மற்றும் பூபேஷ் ஆகியோர் கோவையில் உள்ள தனியார் கல்லூரிகளில், 3ம் ஆண்டு பயின்று வருகின்றனர்.
நேற்று, விஷாலை பார்ப்பதற்காக, அவரது நண்பர்கள் 4 பேர் கார் ஒன்றில் கோவை சென்ற நிலையில், அங்குள்ள உணவகத்தில் உணவருந்திய அவர்கள், பின்னர் விஷாலையும் அழைத்துக் கொண்டு ஐந்து பேருமாக திருப்பூருக்கு கார் மூலம் சென்றுள்ளனர்.
திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார், கணியூர் டோல்கேட்டை தாண்டியபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தடுப்புச்சுவர் மீது அசுரவேகத்தில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் விஷால் மற்றும் பூபேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் உயிருக்குப் போராடிய மற்ற மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்