இஸ்ரேலின் பிரதமராக இருந்தால் அது நடந்திருக்காது..!! டொனல்ட் டிரம்ப் பேச்சு..!!
நவம்பர் 5ம் தேதி நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.. ஹமாஸ் அமைப்பின் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக முதலாம் ஆண்டு நினைவைக் குறிக்கும் சிறப்பு இரங்கல் கூட்டம் இஸ்ரேலில் நடைபெற்றது.
அதைப்போல, இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கும் அமெரிக்காவிலும் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் பிரத்யேக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் அவர் கூறியிருப்பதாவது, “கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட போர் வரலாறு காணாத ஒன்று..
அந்த நாள் இஸ்ரேல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கும். கண்டிப்பாக நான் அந்த சமயம் இஸ்ரேலின் பிரதமராக இருந்திருந்தேன் என்றால் நிச்சயமாக இந்த போரை நடத்த விட்டிருக்க மாட்டேன்”, என கூறினார்.
இஸ்ரேலுக்கு தொடர்ச்சியாக ஆதரவாக பேசி வரும் ட்ரம்ப் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிணைப்பு முன்பை விட வலுவாகவும், நெருக்கமாகவும் இருக்கும்.” எனவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், “வருகின்ற நவம்பர் 5 -ஆம் தேதி நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும். இது இஸ்ரேலின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாகவும் அமைந்துள்ளது. ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய இந்த தாக்குதலை நாம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது”, எனவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்..