இனி ஒவ்வொரு மாதமும் இது கவனிக்கப்படும்..!! தமிழக அரசின் அறிக்கை..!!
குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தது.
இதனை தொடர்ந்து அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டு, செப்டம்பர் மாதம் 15ம் தேதி தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளின் வருமானம் குறித்த தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் எனவும், 4 சக்கர, கனரக வாகனப்பதிவு, பத்திரப்பதிவு குறித்தும், அரையாண்டு அடிப்படையில் தொழில், மின்சார பயன்பாடுகள் பற்றிய தரவுகளையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.