கிடைத்த பொருள் மீண்டும் கிடைக்க இந்த அம்மனை நினைத்தாலே போதும்..!!
அம்பிகை அம்மனை சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது ஐதீக உண்மை.., பிரகதாம்பாள் கொலுவீற்றிருக்கும் இந்த ஆலயம் சென்று அம்பாளை தரிசித்தால் போதும். வாழ்க்கையில் பெரும்பாலும் கிடைத்த பொருட்கள் திரும்ப கிடைப்பதே இல்லை.., அப்படி தொலைத்த பொருள் திரும்ப கிடைக்க வேண்டும் என்றால், இந்த “அரைக்காசு அம்மனை” நினைத்து, அம்மா உனக்கு வெல்லம் கரைத்து வைக்கிறேன் என வேண்டி கொண்டால் தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும்.
தொலைந்த பொருள் மீண்டும் எனக்கு கிடைக்க வேண்டுமா என மனமுருகி வேண்டி கொண்டால், தொலைத்த பொருள் உடனே கிடைத்துவிடும் அற்புதம் இந்த திருத்தலத்தில் மட்டுமே நிகழும்.
இங்கு லட்சுமி நாராயணர், தன் கால் கட்டை விரலை அழுத்தி ஊன்றி நின்ற நிலையில் அருள் பாலிக்கிறார். தொலைந்த பொருள் கிடைக்க மட்டும் அல்ல, புத்தி, உடல்நலம், நிம்மதியான மணவாழ்வு, மகப்பேறு, வளங்கள், மறுமையில் மோட்சம் என்று எல்லாமும் அருள்பவள் இந்த அன்னை. அம்பிகை உபாசனையை பரப்பியவர் ஹயக்ரீவர், ஸ்ரீசக்ரமேரு வில் உள்ள வசின்யாதி வாக்தேவதை கள்தான் திருமியச்சூரில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றினர்.
Discussion about this post