“அது ஒரு முள் கிரீடம்” முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி…!!
எல்லாரும் வாரிசு அரசியல் என்று சொல்லுவதால் வருத்தமாக உள்ளது …… CM ஸ்டாலின் முதல்வர் ஆன உடனே பார்த்த முதல் படம் இதுதானாம்… முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருக்காங்க….
தனியார் YOUTUBE CHANNEL ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள முதலமைச்சர் தன்னுடைய சிறு வயது முதல் தற்போது வரை நடந்துள்ள பல நிகழ்வுகளை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நீங்கள் மூதல்வர் ஆன உடன் முதலில் பார்த்த படம் எது என தொகுப்பாளர் கேட்டதற்கு, நான் முதலில் பார்த்த படம் ஜெய்பீம்.. அந்த படத்தில் வரும் சம்பவம் போன்று எனக்கும் MISAவில் இருந்தபோது நடந்தது. அதனால்தான் படம் முடித்தவுடன் சூர்யாவுக்கும் சூர்யாவின் நிஜ கேரக்டரான சந்துருவுக்கும் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன் எனக் கூறினார்.
அடுத்ததாக கலைஞரோட மகனாக இருப்பதற்கு எதாவது சவாலாக இருந்ததா? என்ற கேள்விக்கு… ஆம் எல்லோரும் வாரிசு வாரிசு என்று சொல்லும்போது வருத்தமாக இருக்கும்… நான் என் உழைப்பால் முன்னுக்கு வர வேண்டும் என நினைத்து உழைத்தேன் என பதில் கூறினார்.
அடுத்ததாக முதல்வர் என்ற பதவியை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, அது ஒரு முள் கிரீடம் என பதில் அளித்தார்.
சத்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..