உங்க குழந்தைக்கு மார்ச் 3-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து போட மறக்காதீங்க…
தமிழகம் முழுவதும் மார்ச் 3-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போலியோ ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் மார்ச் 3-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 051 மையங்களில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பயணத்தில் இருக்கும் பெற்றோர்களின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளில் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.