இந்த படத்துக்கு இவ்ளோ பில்டப்பா..?
ப்ளூ சட்டை மாறன் :
யு டியூபர் ப்ளூ சட்டை மாறன். எவ்வளவு அற்புதமான கமர்ஷியல் திரைப்படங்கள் வெளியானாலும் அதனை கழுவி கழுவி ஊற்றும் இவர், பெரும்பாலும் பரிசோதனை முயற்சியாக வெளியாகும் படங்களை தான் பாராட்டுவார்.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புதிய கமர்ஷியல் திரைப்படம் ஒன்றை, பலரும் ஆச்சரியப்படும் வகையில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மேட் மேக்ஸ் Furiosa..
தமிழ் சினிமாவில் எப்படி புதிய கதைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதோ, அதே போல் ஹாலிவுட்டிலும் புதிய கதைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த கதை பஞ்சத்தை தற்போது வெளியாகியுள்ள மேட் மேக்ஸ் Furiosa படம் நீக்கியுள்ளது.
அழிவு நிலையில் இருக்கும் உலகத்தில், சிலர் தங்களது சுயநலத்துக்காக மக்களை அடக்கி ஆண்டு வருகின்றனர். அதில் மீள முயலுவதை வைத்து தான் இப்படம் உருவாகியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் இன்னொரு பாகம் இன்று வெளியாகியுள்ளது. மேட் மேக்ஸ் ஃபுயரி ரோடை போலவே இப்படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மறக்க முடியாத திரை அனுபவத்தை இப்படம் வழங்கி இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்..
ப்ளு சட்டை மாறன் கருத்து :
இந்நிலையில் இப்படத்தை பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பார்த்துள்ளார். இப்படத்துக்கு தனது முதல் விமர்சனத்தையும் அவர் வழங்கியுள்ளார். அதில், படத்திற்கு மிகவும் பாசிட்டிவ்வான விமர்சனத்தை தந்துள்ளார்.
ஆம், பல ஆயிரம் கோடி ரூபாய் இருந்தாலும் இதுமாதிரியான படத்தை கொடுக்க முடியாது. ரசிகர்களை கடைசி நொடி வரை இப்படம் கட்டிப் போட்டுள்ளது. படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அதகளம் செய்கின்றன.
இரண்டாம் பாதியில் சில இடங்களில் படம் தோய்வு அடைந்தாலும், ஐ மேக்ஸ் ஸ்கீரினில் பார்க்க தகுதியான திரைப்படம் இது என்று பல்வேறு பாசிட்டிவ் கமெண்ட் கொடுத்துள்ளார்.