சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திரசிங் தோனி விளக்கியுள்ளார்.
டாடா ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26 முதல் துவங்க உள்ளது. அனைத்து அணிகளும் போட்டிக்கு மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகி உள்ளதாகவும் மேலும் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை நியமனம் செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2008 முதல் சென்னை அணி கேப்டனாக விளையாடி வரும் தோனி இந்த சீசனில் ஒரு வீரராக மட்டுமே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.