150 ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி..! முன்வைத்த கோரிக்கை..!
பள்ளிக்கல்வித்துறையில் 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருந்த நிலையை மாற்றி 700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்று வெளியிட்ட அரசானையை மாற்ற வலியுறுத்தி பள்ளிக்கல்வி இயக்குநரிடம் ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனை சந்தித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமன வரனுமுறை குறித்தான அரசாணை 150 நீக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் “ஆரோக்கியம்”. நாட்டை பாதுகாப்பது ராணுவத்துறை மாநிலத்தை பாதுகாப்பது காவல்துறை பள்ளி மாணவர்களை காப்பது உயர்கல்வித்துறை, உடற்கல்வி ஆசிரியர் துறைக்கு ஒரு சமூக அநீதி நடந்திருக்கிறது.
700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் :
அரசாணை 150 வெளியிட்டு ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறையில் 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்று இருந்த நிலையை மாற்றி 700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் போதைக்கு அடிமையாகி கெட்டுப் போகும் சூழலில் 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலையை மாற்றி 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை வந்தால் நல்ல ஒரு சீர்திருத்தமாக இருந்திருக்கும்
ஆனால் 700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்பது கண்டிப்பாக பள்ளியில் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாது மாணவர்களின் விளையாட்டு பாதிக்கப்படும் மாணவர்களின் ஒழுக்கம் பாதிக்கப்படும் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி விடுவார்கள்.
இதனால் பள்ளி பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி விட்டு செல்கிறார்கள் ஆனால் உடற்கல்வி ஆசிரியர்கள் தான் பள்ளிக்கு பாதுகாப்பு அரணாக இருந்து பள்ளியை வழிநடத்துகிறார்கள்.
அப்படிப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அரசு முன்வந்து ஆதரவு கொடுக்க வேண்டும் விளையாட்டுத்துறை அமைச்சர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு இந்த தகவல் சென்று உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நீதி கிடைக்கும் என நம்புகிறோம். என தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆரோக்கியம். இவ்வாறே பேட்டி அளித்துள்ளார்.
-லோகேஸ்வரி.வெ