”இந்தியா விரைவில் வல்லரசாகும்..” விஞ்ஞானி இளங்கோவன் நம்பிக்கை..!!
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம் சித்திரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா, மகளிர் தினவிழா, அறிவியல் திருவிழா என முப்பெரும் விழா நடைபெற்றது…
இவ்விழாவில் இந்திய விஞ்ஞானி ஆராய்ச்சி மையம் இளங்கோவன், பள்ளி கல்வித்துறை ஆசிரியர் மனசு, மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார், இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும் விஞ்ஞானிகள் வெங்கடாசலம் அன்புமொழி, இளஞ்செழியன் அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியில் மாணவர்கள் செய்திருந்த அறிவியல் கண்காட்சிகளையும் பார்வையிட்டு பள்ளி மாணவ, மாணவிகளை வெகுவாக பாராட்டினர். மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்…
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி இளங்கோவன் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முன்னாள், இந்நாள் மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களே சேர்ந்து வந்து இந்த விழாவை நடத்தி இருப்பது மிகப் பெருமை அளிப்பதாகவும் இது ஒரு தேர் திருவிழா மாதிரி ஊர் கூடி தேர் இழுப்பது போல் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அறிவியலை இழுக்க ஆரம்பித்து விட்டார்கள். நிச்சயமாக இந்தியா வல்லரசு ஆகும், என்ற நம்பிக்கை இதை பார்க்கும் பொழுது உள்ளத்தில் உண்டாகிறது.
12 ஆம் வகுப்பு முடித்தவுடன் குறைந்த பட்சம் பொறியியல் படிப்பு வேண்டும். இஸ்ரோவில் சேர்வதற்கென தனியான படிப்பு ஏதுமில்லை. எனவும் ஐஎஸ்ஆர் உடைய கல்லூரியில் சேர்ந்தால் இஸ்ரோவில் சுலபமாக சேரலாம். ஜேஇஇ அட்வான்ஸ் மெயின் மதிப்பெண்கள் பெற்றால் எந்தவித பரிந்துரையும் இல்லாமல் இஸ்ரோவில் சேரலாம். எனவும் அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்களால் பல விஞ்ஞானிகள் உருவாகப் படுகிறார்கள் எனவும் கூறினார்.
அப்போது மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள் இப்பள்ளியில் பயின்ற முன்னால், இன்னால் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.