உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி கொரோனா தொற்றின் தீவிரம் குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் உலகையே முடக்கியது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக ஆதன் பரவும் தீவிரம் குறைந்ததால் உலக நாடுகள் ஊரடங்கை தளர்த்த ஆரம்பித்தனர். இந்தியாவிலும் கடந்த ஜூன் மதம் முத்தம் கட்டாய முகக்கவசம் முறை நீக்கப்பட்டது. இதனால் உலகமே மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது. இந்நிலையில் ஓமைக்ரான் வெரியண்ட் பிஎப் 7 வகை வைரஸ் மீண்டும் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. சீனா,அமெரிக்கா,கொரிய உள்ளிட்ட நாடுகளில் இதன் தீவிரம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், இந்த வகை வைரஸ் இந்தியாவில் இது வரை 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் கடுமையா கட்டுப்பாடுகளுடன் கூடிய பரிசோதனைகள் கட்டயமாக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பிரதமர் மோடி இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்தும் மற்றும் முகக்கவம், தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.